Type to search

Headlines Local News News

7 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் 5 பேர் கைது

Share

7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று நேற்று (28) அதிகாலை வெளியேற முற்பட்ட போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களுள் ஒரு பெண்ணும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இதன்போது, அவர்கள் ஒரு புதிய உத்தியைக் கையாண்டு, 6 கிலோகிராம் 110 கிராம் ஹசீஸ் போதைப்பொருளையும், 11 கிலோகிராம் 062 கிராம் குஷ் போதைப்பொருளையும் 15 கண்ணாடிப் போத்தல்களுக்குள் அடைத்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள இலங்கை தீர்வையற்ற வர்த்தக வளாகத்தின் பெயர் அச்சிடப்பட்ட பொலித்தீன் பைகளில் மறைத்து எடுத்துவந்துள்ளனர். 

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link