Type to search

Headlines Local News News

4 கோடி ரூபாய்க்கும் அதிக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Share

ஹஷீஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார். 

சந்தேகநபர் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் எயார்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

அவர் கொண்டு வந்த பயணப் பொதியினுள் சொக்லேட் போன்று பொதி செய்யப்பட்ட 15 உறைகளில் இந்த ஹஷீஷ் போதைப்பொருள் கண்டறியப்பட்டது. 

சந்தேகநபர் 04 கிலோ 778 கிராம் எடையுள்ள ஹஷீஷ் போதைப்பொருளை இவ்வாறு மறைத்து நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். 

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் நான்கு கோடியே 77 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

சந்தேகநபரை இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, தடுப்பு காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link