20 வருடங்களின் பின் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை ஹாக்கி அணி!
Share
தாய்லாந்தில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிகாண் ஹாக்கி தொடரில், இலங்கை ஆண்கள் அணி பங்களாதேஷை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் (2006-க்குப் பிறகு) பங்களாதேஷிற்கு எதிராக இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஏற்கனவே உஸ்பெகிஸ்தானை (3-1) வீழ்த்தியிருந்த இலங்கை அணி, தற்போது தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
இலங்கை அணி தனது இறுதி லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 6) சீன தைபே அணியுடன் மோதவுள்ளது.


