Type to search

Headlines Local News News

14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது

Share

14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் இரண்டு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (18) காலை 9.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்காக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இரண்டு பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த “குஷ்” (Kush) போதைப்பொருளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர், அது 14 கிலோகிராம் 562 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இந்த போதைப்பொருள் ஆடைகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் 28 பொட்டலங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link