Type to search

Headlines Local News News

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Share

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 38.67 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் வருகை தந்த மற்றும் சிலர் இந்த கைது நடவடிக்கையின் பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. கைதானவர் கொழும்பைச் சேர்ந்த 27 வயது வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

இன்று காலை டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் ஊடாக அவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களின் 16 பயணப் பைகளில் சுமார் 229,800 வெளிநாட்டுத் தயாரிப்பு மான்செஸ்டர் சிகரெட்டுகள் அடங்கிய 1,149 சிகரெட் அட்டைப்பெட்டிகளையும், 113 மின்னணு சிகரெட்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link