Type to search

Headlines Local News News

வான்பாயும் 20 நீர்த்தேக்கங்கள் – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!

Share

நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக, நீர்ப்பாசன திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 20 பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து  வருவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது வான்பாய்ந்து வரும் முக்கிய நீர்த்தேக்கங்கள் மாவட்ட வாரியாக கீழே தரப்பட்டுள்ளன:

  • அனுராதபுரம் மாவட்டம்: இராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கங்கள்.
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வெவ, வீரவில யோத வெவ மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்கள்.
  • குருணாகல் மாவட்டம்: அம்பகொல வெவ, உஸ்கல சியம்பலாங்கமுவ, மெதியாவ, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்கள்.
  • மாத்தளை / கண்டி மாவட்டம்: நாலந்த மற்றும் வேமெடில்ல நீர்த்தேக்கங்கள்.
  • மொனராகலை மாவட்டம்: ஹதபானகல மற்றும் அலிகொட்டஆர நீர்த்தேக்கங்கள்.
  • புத்தளம் மாவட்டம்: இங்கினிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள்.
  • மன்னார் மாவட்டம்: கட்டுக்கரை யோத வெவ (Giant’s Tank).
  • பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம்.

நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதன் காரணமாக, குறித்த ஆறுகளை அண்டியுள்ள பகுதிகளிலும் தாழ்நிலப் பிரதேசங்களிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link