Type to search

Headlines Local News News

வாகன இறக்குமதி சுங்க வரியின் மீது மேலதிக வரி

Share

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் ஒன்றுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 30% சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50% மேலதிக வரி விதிக்கப்படும். 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு இந்த 50% மேலதிக வரி வசூலிக்கப்படவுள்ளது. 

இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50% சுங்க வரி பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link