வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் ஒத்துழைப்பு
Share
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு ஜப்பானிடமிருந்து 400 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் பல உதவிகளை வழங்கி வருகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு ஜப்பான் அரசு 400 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
இதன்மூலம் சுமார் 4 இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவிலான நிலப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும். 2002ம் ஆண்டு முதல் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கென ஜப்பான் அரசு 49 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


