Type to search

Headlines Local News News

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

Share

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.

ஆளுநரிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் புதிய ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். 

இந்த முக்கியத்துவமிக்க நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link