மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி விபத்து ; தந்தை, மகன் பலி – யாழில் சம்பவம்
Share
யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில், பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 23 மற்றும் 64 வயதுடைய ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் தந்தையும் மகனுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களின் உடலங்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


