Type to search

Headlines Local News News

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

Share

பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. 

சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை முதல் 100 கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிக பயணத் தூரத்திற்கு 15 சதவீதத்தினாலும் அதிரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link