Type to search

Headlines Local News News

புதிய இல்லத்தில் ஜனாதிபதியின் புத்தாண்டு கொண்டாட்டம் 

Share

டித்வா சூறாவளியினால் சேதமடைந்து, அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட புதிய இல்லமொன்றில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (14) கலந்துகொண்டார். அநுராதபுரம், கல்நேவ பிரதேசத்தின் மல்பெலிகல கிராமத்தைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் என்பவரின் வீட்டிற்குப் பால் காய்ச்சி குடிபுகும் நிகழ்வோடு, புத்தாண்டு சுபநேரச் சடங்குகளிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டின் கீழ் ஐந்து மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த இல்லம், அப்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் ஒன்றாகும். இதன்போது அங்கு கூடியிருந்த மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்களான லால்காந்த, வசந்த சமரசிங்க மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link