Type to search

Headlines Local News News

நீராட சென்ற மூன்று சகோதரர்கள் மாயம் – இருவர் பலி!

Share

திருகோணமலை – சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நேற்று மாலை நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். 

மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இந்த மூன்று சகோதரர்களும், அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் நீராடிக் கொண்டிருந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். 

காணாமல் போனவர்களை, கடற்படை உயிர்காப்புப் பிரிவினரும் சேருநுவர பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை,  ஹபராதுவ கடற்கரையில் நேற்று மாலை நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கியுள்ளனர். 

அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு களுக்கல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களாவர். 

இவர்கள் கட்டுநாயக்க பகுதியில் இருந்து சுற்றுலா வந்திருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link