Type to search

Headlines Local News News

நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்

Share

நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. 

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும, 

“உயர் இரத்த அழுத்தம் இருப்பது பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால், குறைந்தது ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதன் மூலம், அது அதிகரித்துள்ளதா என்பதை எம்மால் கண்டறிய முடியும். இலங்கையில் பொதுவாக நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இதில் 63.9 சதவீதமானோர் சிகிச்சை பெறுவதில்லை. மேலும், சிகிச்சை பெறுபவர்களில் 39.1 சதவீதமானோரின் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை. அதிக உப்புள்ள உணவுகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்” என்று குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link