Type to search

Headlines News World News

தாய்லாந்தில் பேருந்து – ரயில் மோதி விபத்து : 8 பேர் பலி!

Share

தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் சரக்கு ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய பகுதியிலுள்ள விமான நிலைய ரயில் இணைப்பு நிலையம் அருகே, பிற்பகலில் இந்த விபத்து நடந்ததாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தின்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதில், ரயில்வே கிராசிங்கில் வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தபோது, ​​சரக்கு ரயில் மீது ஆரஞ்சு நிறப் பேருந்து மோதுகிறது.

மோதிய வேகத்தில் அருகிலிருந்த பல வாகனங்கள் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தின்போது பல இருசக்கர வாகனங்களும் அவற்றின் ஓட்டுநர்களும் வீதியில் தூக்கி வீசப்பட்டு விழுந்து கிடந்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link