Type to search

Headlines Local News News

தாண்டிக்குளம் ரயில் விபத்து – சிகிச்சை பலனின்றி சாரதியும் உயிரிழப்பு!

Share

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற  ரயில் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன், தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது. 

இதனைத் தொடர்ந்து, விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் மூலம் இந்தக் கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link