Type to search

Headlines News World News

ஜப்பானில் அதிகாலை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Share

ஜப்பானின் வடக்கு பகுதியில்  ஹொக்கைடோவில் இன்று (27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி 6.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சரபெட்சு நகருக்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.

மேலும் அது பூமியின் மேற்பரப்பிலிருந்து 81 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இந்நிலையில் இதுவரை சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை. 

ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link