சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்க வைத்தியர் டெவினா நவீக்ஷி துருக்கி பயணம்!
Share
துருக்கியின் அந்தால்யா நகரில் நடைபெறவுள்ள “மிஸ் அவ்ரா இன்டர்நேஷனல் 2026” சர்வதேச அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்பதற்காக வைத்தியர் டெவினா நவீக்ஷி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கி நோக்கிப் புறப்பட்டார்.
சுமார் 50 நாடுகளின் அழகிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர், மே மாதம் 10 ஆம் திகதி முதல் மே 22 ஆம் திகதி வரை துருக்கியில் நடைபெறவுள்ளது.
இலங்கை சார்பில் இதில் பங்கேற்கும் டெவினா நவீக்ஷி ஒரு தொழில்முறை வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-649 என்ற விமானம் மூலம் துருக்கி நோக்கிப் பயணமானார்.


