கீரிமலை கடலில் நீராடிய இளைஞன் சடலமாக மீட்ப்பு
Share
கீரிமலை கடலில் நீராடிய ஒருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில் ,
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கி குளித்துள்ளார்.
இதன்போது தீடீரென நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


