Type to search

Headlines Local News News

கிளிநொச்சியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Share

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்நகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (15.04.2026) மாலை சுமார் 4.00 மணியளவில், கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அம்பல்நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை சோதனையிட்டதில் அவரிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 03 கிராம் 100 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரை இன்றைய தினம் (16.04.2026) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link