களனி கங்கையில் நீராடிய நபர் நீரில் மூழ்கி பலி!
Share
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலிகம பகுதியில் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (15) குறித்த நபர் தனது உறவினர்கள் சிலருடன் நெலிகம பகுதியில் நீராடச் சென்றுள்ளார். இதன்போது அவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, கித்துல்கல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) உயிர் காப்புப் பிரிவினர் உடனடித் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
நீண்ட தேடுதலின் பின்னர், ஆற்றின் ஆழமான ஒரு பகுதியிலிருந்து அந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹட்டன், மொரஹேனகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கித்துல்கல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


