Type to search

Headlines Local News News

கந்தளாயில் துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்ப்பு!

Share

கந்தளாய், வென்றாசன்புர குளத்திற்கு அண்மித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், T-56 ரகத் தோட்டாக்கள் கந்தளாய் பொலிஸார் இன்று (23) மீட்கப்பட்டன. 

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கந்தளாய் அவசர பொலிஸ் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மல் விஜேவர்தனவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தேடுதலின் போது, மொத்தம் 51 தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசின் (Magazine) என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

T-56 ரக தோட்டாக்கள்  47, GTNG தோட்டாக்கள்: 02, S.L.R. தோட்டா: 01ஃ. 9 MM தோட்டா: 01

மெகசின் (Magazine): 01 ஆகியன மீட்கப்பட்டன. 

குறித்த தோட்டாக்கள் யாரால், எதற்காக அங்கு கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link