எரிபொருள் விநியோகஸ்தர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!
Share
எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் இலாபப் பங்கு குறைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை முற்பகல் 9.30 மணி முதல் (06) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் ஊழியர்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் மற்றும் உரிய முறையில் டீசல், பெற்றோல் வழங்கப்படாமை போன்ற காரணங்களால் எரிபொருள் நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், தமக்கு வழங்கப்பட வேண்டிய 3 சதவீத இலாபப் பங்கு புதிய நிர்வாகத்தினால் வெட்டப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


