Type to search

Headlines Local News News

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் நியமனம்

Share

இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) புதிய தலைவராகவும், அதன் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

அத்துடன், அதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷணி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்குரிய நியமனக் கடிதங்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link