Type to search

Headlines News Sports

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவிற்கு அங்கீகாரம்

Share

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2026 மே 20 ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவிற்காக பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39 (1) ஆம் பிரிவு மற்றும் 2025 மே 21 ஆம் திகதியிட்ட 2437/24 என்ற இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி, நியமிக்கப்பட்டுள்ள புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் பின்வருமாறு: 

கபில விஜேகுணவர்தன – தலைவர் 

அமல் சில்வா – உறுப்பினர் 

பிரெண்டன் குருப்பு – உறுப்பினர் 

வருண வராகொட – உறுப்பினர் 

வெனிசா டி சில்வா – உறுப்பினர்

இந்த புதிய நியமனங்கள் மூலம் இலங்கை கிரிக்கெட் துறையின் எதிர்காலத் தெரிவு நடவடிக்கைகள் மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் முறைப்படியும் நடைபெறும் என அமைச்சு எதிர்பார்க்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link