Type to search

Headlines Local News News

இலங்கையில் டெங்கு அபாயம் — 25,082 பேருக்கு தொற்று, 12 பேர் பலி!

Share

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

டெங்கு நோய் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் கொழும்பு மாநகர சபைப் பிரிவிலும் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலைத்தால் உடனடியாக வைத்தியரை அணுகி டெங்கு நோயா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வைத்திய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார். 

காய்ச்சலுக்கு பெரசிட்டமோல் மட்டுமே பயன்படுத்தவும், கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link