Type to search

Headlines Local News News

இந்திய விமானப்படைத் தளபதி – இலங்கை கடற்படைத் தளபதிக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு!

Share

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு நேற்று (21) கடற்படைத் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதியை, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு உத்தியோகபூர்வ கௌரவமளிப்பு வழங்கப்பட்டது.

அதனையடுத்து, கடற்படைத் தளபதியினால் கடற்படைப் பணியாளர்களின் பிரதானி உள்ளிட்ட அதன் நிர்வாகக் குழுவினர் இந்திய விமானப்படைத் தளபதிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இச்சந்திப்பில், இந்திய விமானப்படைத் தளபதிக்கும் இலங்கை கடற்படைத் தளபதிக்கும் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இருதரப்பிற்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link