Type to search

Headlines Local News News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன சடலமாக மீட்பு

Share

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, இன்று (08) கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கபில சந்திரசேன தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேன, அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவரது பிணையை ரத்து செய்யுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரியதையடுத்து, அவரைக் கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link