Type to search

Headlines Local News News

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மறுஆய்வு மனு  காரணமாக, இந்த வழக்கின் சாட்சிய விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரச தரப்பின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை சாட்சிய விசாரணைகளை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானித்தது.

இதன்படி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜூலை 09ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link