Type to search

Headlines News World News

மும்பை குடும்பத்தின் மர்ம மரணம்: தர்பூசணியில் எலி மருந்து கலந்திருந்தமை உறுதி

Share

மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தமைக்கு தர்பூசணி பழத்தினால் ஏற்பட்ட உணவு நஞ்சூட்டல் காரணமல்ல எனவும், எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் “சின்க் பொஸ்பைட்” (Zinc Phosphite) என்ற நச்சு இரசாயனம் உடலில் கலந்தமையே காரணம் எனவும் தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் அவர்கள் உட்கொண்ட பழ மாதிரிகளில் இந்த நச்சுப் பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

45 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இவ்வாறு உயிரிழந்திருந்தனர். பிரேத பரிசோதனையின் போது அவர்களின் உடல் உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்தமை நஞ்சூட்டப்பட்டதை உறுதி செய்திருந்தது.

இந்த நச்சு இரசாயனம் தற்செயலாக பழத்தில் கலந்ததா அல்லது திட்டமிட்டு செலுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதேவேளை, உயிரிழந்த அப்துல்லாவின் உடலில் மோர்ஃபின் (Morphine) மருந்தும் கண்டறியப்பட்டுள்ளமை மேலதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link