Type to search

Headlines Local News News

நில அபகரிப்பு தொடர்பில் கனடா,பிரிட்டன் உயர்ஸ்தானிகர்களுடன் கலந்துரையாடல்!

Share

கிழக்கு மாகாண நில உரிமை மற்றும் மனித உரிமை விவகாரங்கள் நேற்று (06), இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகரை, கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினர் திருகோணமலை Trinco Blu Hotel இல் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில், கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்புடன் இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி மகஜர் கையளிக்கப்பட்டதுடன், அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இவ்விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் தாங்கள் எதிர்வரும் காலங்களில் கலந்துரையாட முனைவதாக,உயர்ஸ்தானிகர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link