Type to search

Headlines News World News

ஓமானில் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்

Share

ஓமானில் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், நிரந்தர அமைதிக்காக நடந்து வரும் பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது ஓமானில் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் குவைத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகள் சேதமடைந்தன.

இதில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது ஓமானில் ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link