உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
Share
போலி அதிகாரப் பத்திரம் ஒன்றைத் தயாரித்து, ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூன் மாதம் 11 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான உதய கம்மன்பில சாட்சிக் கூண்டிலிருந்து சாட்சியமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
ஆஸ்திரேலிய தொழிலதிபரான Brian Shaddick என்பவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை, போலி அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் கூறி, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சட்டமா அதிபரால் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


