சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற தி.மு.க ஒழிந்து போகிறது பார்
Share
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் வரலாற்றில் பேசுபடுபொருளாகி யுள்ளது.
ஆம், அரசியலில் காலடி வைத்த கணத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சர் பதவியைத் தனதாக்கிக் கொள்வதை எவரும் சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது.
அதிலும் கருத்துக் கணிப்புகள் என்ற பேரில் விலைபோன பிரகிருதிகள் யார் யாரிடம் பணம் வாங்கிக் கொண்டார்களோ அவர்களுக்குச் சாதகமாகக் கருத்துக் கணிப்பை வெளியிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒரு சில ஆசனங்கள் கிடைப்பது கூட கடினம் என்பதாகத் தமது கருத்துக் கணிப்புக்களை முன்னிறுத்தின.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மகத்தான சாதனை படைத்துள்ளதெனில், அதற்கு மூலகாரணம் நடிகர் விஜய் என்ற தனி மனிதன் என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
ஆம், ராம்ராஜ் பாண்டே என்ற அரசியல் விமர்சகர்; நடிகர் விஜய் ஒரு சில ஆசனங் களைப் பெறுவதாக இருந்தால்கூட, இதர அரசியல் கட்சிகளுடன் கூட்டுச் சேர வேண்டும் எனப் பகிரங்கமாகத் தனது கருத்தை முன்வைத்திருந்தார்.
பரவாயில்லை. ஜனநாயகத்தின் சுதந்திரம் சொந்தப் பிழைப்புக்கும் உதவுகிறது என்றளவோடு அஃது ஒருபுறமிருக்க,
நடிகர் விஜய் இத்துணை தூரம் பெருவெற்றி அடைவதற்கு மூலகாரணம் என்ன வென்று ஆராய்ந்தால் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி போன்றவர்கள்தான் என்பது தெரியவரும்.
ஆம், துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் உரையாற் றும்போது; சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்டுவதுதான் எங்களின் கடமை எனக் கூறினார்.
இந்து சமயம், சனாதனதர்மம் எனப் போற்றப்படுகிறது. அந்த சனாதனதர்மத்தை ஒழித்துக் கட்டுவதுதான் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொள்கை என்று கூறியபோது, அது சனாதனதர்மத்தையல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பதற்கு உதயநிதிஸ்டா லின் பூர்வாங்கக் கிரியை செய்கிறார் என சான்றோர் பெருமக்கள் முடிவு செய்தனர்.
இதுபோல இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருந்த சேகர் பாபு இந்து மக்க ளுக்குச் செய்த கொடுமை மற்றும் திமுகவிடம் யாசகம் பெற்று இந்து சமயத்தை கண்டபாட் டில் இழிவு செய்த பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி போன்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் சாம்ராஜ்ஜியம் சரிந்து விழுந்து நொருங்குவதற்குக் காலாயினர்.
ஆம், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறி; திமுகவை ஒழித்ததுதான் உதயநிதி ஸ்டாலின் செய்த மகத்தான சாதனை எனலாம்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


