புதுச்சேரிப்பயணம் 11
Share
புதுச்சேரி பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்ற போது அங்கிருந்த வலம்புரி மஹா கணபதிப் பிள்ளையாரின் கோலம் மனதை கொள்ளை கொண்டது.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆலயத்திற்கு வந்துள்ளார் என்றதும் ஆலய நிர்வாகிகளும் சிவாச்சாரியர்களும் சேர்ந்து கம்பவாரிதியை வரவேற்றனர்.
36 அடி உயரமான ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் எம்மை அறியாமலே வணங்கவும் வழி படவும் வைக்க வல்லது.
ஆலய நிர்வாகிகள் கம்பவாரிதியை ஆலயத்தின் மூலஸ்தானப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அவரோடு யானும் செல்கின்ற பேறைப் பெற்றேன்.
அங்கு வழிபாடுகள் இடம் பெற்ற பின்னர் திண்டி வனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் டோல்கேட் என்ற இடத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான (27 அடி) விஸ்வரூப பஞ்சலோக சனீஸ்வர பகவான் ஆலயத் திற்குச் சென்றோம்.
27 அடி உயரமான சனீஸ்வரப் பெருமான் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கி ன்றார்.
இதைவிட ஆலயத்தின் மேற்குப் பக்கமாக நவக்கிரக ஆலயம் அமைந்துள்ளது.
மிகப் பிரமாண்டமான நவக்கிரக விக்கிரகங்கள். நடுப்பகுதியில் யாககுண்டம். பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாள்தோறும் அங்கு நவக்கிரக தோஷ நிவர்த்தி யாகம் நடைபெறுகின்றது.
இதற்கும் மேலாக, சனி தோச நிவர்த்தியின் பொரு ட்டு பூட்டுக்கள் வாங்கிக் கொடுக்கின்ற ஒரு நடைமுறையும் உண்டு.
அவ்விதம் நேர்த்தியாக வழங்கப்பட்ட பூட்டுக்கள் நவக்கிரக நாயகர்கள் அமைந்துள்ள இடத்தில் சனீஸ்வர னுக்கு முன்பாக உள்ள இடத்தில் வைத்து பூட்டப்படும். தங்களின் கஷ்டங்களை வைத்துப் பூட்டுவதாகப் பாவனை செய்கின்ற வகையில் இப்பூட்டுப் பரிகாரம் இடம்பெறுகிறது.
குறித்த விஸ்வரூப பஞ்சலோக சனீஸ்வரப் பெருமானின் ஆலயத்தில் அமையப் பெற்ற விக்கிரகங்கள் எல்லாமே மிகவும் உயர்ந்தவையாகவும் தெய்வாம்சம் பொருந்தியவையாகவும் இருப்பதைக் காணமுடிந்தது.
இதற்கும் மேலாக, ஆலய உள்வீதியில் உள்ள சுவர்களில் சித்தர் பெருமக்களின் சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை அற்புதமான காட்சியாக அமைந்திருந்தன.
பொதுவில் சனீஸ்வரன் கோயில் என்றால் அது திருநல்லாற்றில் உள்ள சனீஸ்வரன் கோயிலையே எவரும் கூறுவர்.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் 27 அடி உயரமான சனீஸ்வரர் ஆலயம் அமைந்தி ருப்பதும் அங்கு தரிசனம் செய்யக் கிடைத்ததும் பெரும் பேறு என்றே கூற வேண்டும்.
பொதுவில் புதுச்சேரிப் பயணத்தில் பஞ்சவடி ஆஞ்ச நேயர் ஆலய தரிசனமும் சனீஸ்வரர் ஆலய வழிபாடும் மனதுக்கு இதமாக அமைந்திருந்தன.
அதேநேரம் சனீஸ்வரர் ஆலயத்தில் தினந்தோறும் நவக்கிரகதோ பரிகாரம் நடப்பதனால் போலும் அந்தணச் சிவாச்சாரியர்களும் அந்தண மாணவர்களும் நிறையவே காணப்பட்டனர்.
அதிலும் அந்தண மாணவர்கள், கூட்டம் கூட்டமாக இருந்து வேதபாராயணம் செய்வதையும் அவதானிக்க முடிந்தது.
இதைப் பார்த்த போது தான் எங்கள் மண்ணில் ஒரு சிவாச்சாரியர் பத்து ஆல யங்களில் புரோகிதம் செய்ய, அங்கு நூறு சிவாச்சாரியர்கள் ஓர் ஆலயத்தில் புரோகிதப் பணியில் ஈடுபட்டிருப்பதை கண்ணுற்ற போது அங்குள்ள ஆலய எழுச்சிக்கு அதுவும் ஓர காரணம் என்பதை உணர முடிந்தது.
தொடரும்…


