தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 13
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம் என உரைக்கப்பட்டாலும் உலகமெங்கும் சைவநீதி விளங்குவதற்கு தமிழகமே மூலாதாரமாக இருந்திருக்க வேண்டும்.
ஆம், பன்னிரு திருமுறை களையும் தந்தருளிய தென்னாடாகிய தமிழகமே உலக மெங்கும் சைவநீதி விளங்க வகை செய்திருத்தல் வேண்டும்.
ஆனால் பிராமணர் சமூகத்திற்கு எதிராக எழுந்த திராவிட அமைப்புகள் பிராமண குலத்தை எதிர்ப்பதன் போக்கில் சைவ சமயத்தையும் வஞ்சித்துக் கொண்டது.
இங்கு பகுத்தறிவின் தந்தையயனப் போற்றப்படும் ஈ.வே.ரா.பெரியார், கடவுள் மறுப்புக் கொள்கையை பரப்புகை செய்தார். கூடவே எங்கள் உயிரினும் மேலான தமிழ் மொழியைத் தூற்றினார்.
அதாவது கடவுள் மறுப்புக் கொள்கையோடு சைவ மக்களின் கிரியை வழிபாடுகளையும் சமய ஆசாரங்களையும் கேலியும் கிண்டலும் செய்ய, சம நேரத்தில் பேரரறிஞர் அண்ணா நாஸ்திகத்தை கண்டபாட்டில் விதைத்தார்.
இதன் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாற்பட்டவர்கள் சைவ சமயத்தை நிந்தை செய்தனர்.
கூடவே கடவுள் மறுப்புக் கொள்கையைப் பரப்பி, இறைவழிபாட்டை மூடநம்பி க்கையாக வெளிப்படுத்தினர்.
இவ்வாறு பகுத்தறிவு என்ற பெயரால் சைவ சமயத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் செய்த கொடுமை கொஞ்சமல்ல.
இதில் கலைஞர் கருணாநிதி, கடவுள் மறுப்புக் கோட்பாட்டைக் கொண்டிருந்தாலும் சைவ சமயத்தை நிந்தனை செய்யத்தடைப்பட்டிலர்.
உண்மை. கலைஞர் மு.கருணாநிதியிடம் நாஸ்திகக் கொள்கை இருந்தாலும் இந்து சமயத் தலைவர்களுக்கும் துறவிகளுக்கும் அவர் உரிய மதிப்புக் கொடுத்தார்.
காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியாக இருந்த பெரியவா சரஸ்வதி சந்திரசேகர் சுவாமிகளின் மீது கலைஞர் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.
தவிர, நாஸ்திகப் போக்கைத் தான் பின்பற்றினாரேயன்றி, தான் கொண்ட கொள்கையை மற்றவர்களும் பின்பற்ற வேண்டுமென அவர் ஒரு போதும் வலியுறுத்தியதில்லை.
இதன் காரணமாக கலைஞரின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, மருமகள் துர்க்கா ஆகியோர் இந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடாற்றினர்.
இதற்குத் தக்க உதாரணம் ஒருமுறை தமிழகத்திற்குப் பயணம் மேற்கொண்ட பக வான் சத்யசாயி பாபா அவர்கள் கலைஞர் மு.கருணா நிதியின் இல்லத்திற்குத் திடீர் விஜயம் செய்தார்.
பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா தங்கள் வீட்டிற்கு வருகை தந்ததும் கலைஞர் கருணா நிதியின் மனைவி தயாளு அம்மாள், பஞ்சாங்க நமஸ்காரத்துடன் சுவாமிகளின் பாதம் பணிந்து ஆசீர்வாதம் பெற்றார்.
இதிலிருந்து கலைஞர் கருணாநிதி மற்றவர்களின் இறை நம்பிக்கைகளுக்கு ஒருபோதும் இடையூறு செய்ய நினைத்ததில்லை என்பது உறுதியாகிறது.
பகவான் சாயி பாபாவின் பாதங்களை தயாளு அம்மாள் பணிந்து வழிபட்டதை தமி ழகத்தின் சில ஊடகங்கள் விமர்சித்தன. ஆயினும் அது அவரவர் விருப்பம் எனக்கூறி, எழுந்த விமர்சனங்களை கலைஞர் முறியடித்தார்.
அதேநேரம் கலைஞர் கருணாநிதியின் வாரிசுகளான மு.க.ஸ்ராலின், உதயநிதி ஸ்ராலின் ஆகியோர் சைவ சமயத்தைக் கடுமையாகத் தாக்கினர்.
ஒருமுறை பொதுக் கூட்ட மொன்றில் உரையாற்றிய முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்ராலின், சனாதன தர்மத்தை ஒழிப்போம் எனக்கூறி உலகம் முழுமையிலும் உள்ள இந்துக்களின் மனங்களை நோகடித்தார்.
சரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரிய எதிர்ப்பின் காரணமாக சனாதன தர் மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்ராலின் கூறினார் என இந்து மக்கள் அமைதி கொண்டனராயினும் நத்தார் பண்டிகை ஒன்றின் விசேட நிகழ்வுக்கான அழைப்பை ஏற்று அதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்ராலின்; நான் ஒரு கிறிஸ்தவன் எனக் கூறிய போது, அடடா! சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்ராலின் கூறியதன் மர்மம் இது தானா என இந்து மக்கள் தங்களுக்குள் புளுங்கிக் கொண்டனர்.
இதற்கும் மேலாக, காலாகாலமாக திருச்செந்தூர் மலையில் ஏற்றப்படும் கார்த்திகைத் தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்தமையானது, தமிழகத்தின் ஆட்சியிலிரு ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை பதவியிறக்கம் செய்தது.
ஆம், ஓர் இந்துவாக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்ராலின் தன்னை ஒரு கிறிஸ்தவர் எனக்கூறும் போது, பிறப்பால் கத்தோலிக்க மதத்தவராக இருந்தும் இந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபடுகின்ற ஜோசப் விஜய் அவர்களை தமிழகத்தின் முதலமைச்சராக்குவது சாலச்சிறந்தது எனத் தீர்மானித்த தமிழக இந்துக்கள்; மு.க.ஸ்ராலினுக்குப் படுதோல்வியைக் கொடுத்து விஜய் அவர்களை தமிழகத்தின் முதலமைச் சராக்கினர்.
தொடரும்…


