Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

போர் (BORE)

“1946 இல் நான் வெளிநாடு போயிருந்தபோது ” என்று பேச ஆரம்பிப்பார் ஒரு பெரியவர்.

உடனே பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் மெதுவாக எழுந்து நழுவ ஆரம்பித்து விடுவார்கள் ஏன் அப்படி நழுவ ஆரம்பிக்கிறார்கள்?

அவர் வெளிநாடு போய்விட்டு வந்த கதையை கேட்பதற்கு விருப்பம் இல்லாமலா?

அப்படி இல்லை… அந்தக் கதையை ஒரு தடவை இரண்டு தடவை கேக்கறதுன்னா நல்லா இருக்கும். அதே கதையை இப்ப 244 ஆவது தடவையா அவர் சொல்ல ஆரம்பிக்கிறார் !”

கேட்பவர்களுக்கு ‘போர்” அடிக்காமல் என்ன சேர் செய்யும்? அது தான் தப்பித்து ஓடப் பார்க்கிறார்கள் நாம் பேச ஆரம்பிச்சதும் எதிரில் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்துவிடுகிறார்கள் என்று வைங்க… எங்களிடம் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

இதை அலட்சியமா விட்டு விடக்கூடாது. என்ன விடயம் என்று சுயமா ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

இன்றைக்குத் ‘தகவல்’ லே bore ஐ பத்தி ஒரு சின்ன ஆராய்ச்சி

போர் அடிக்கிற ஆசாமிகளுக்கு ஒரு முக்கியமான விடயம் தெரிவதில்லைங்கறார் ஒரு நிபுணர்.

அது என்ன தெரியுமா? அவங்க அடிக்கறது bore என்று அவங்களுக்குப் புரிவதில்லை! அது தான் கஷ்டம்!

போர் ஆசாமிகள் எப்படி இருப்பார்கள்.அவங்க சுபாவம் எப்படி? என்றால்.

அவங்களுக்கு எல்லாம் சொந்த திருப்திதான் முக்கியமாக இருக்கும். அவங்கள் எல்லாம் sensitive ஆ இருக்க மாட்டாங்க.!

அவர்கள் தங்களைப் பற்றியே அதிகமா பேசிக்கொண்டிருப்பார்கள். மத்தவங்க மத்தியிலே நாம ஒரு bore ஆசாமின்னு பேர் வாங்கிவிடக்கூடாது என்று.

சில நுணுக்கங்களை தெரிஞ்சி வைத்திருக்க வேண்டும். அடுத்தவர்களிடம் எப்ப பார்த்தாலும் நம்மளைப் பத்தியும் நம்ம குடும்பத்தைப் பற்றியும் பேசிக் கொண் டிருக்கக் கூடாது.

‘நான்” .’எனது” என்கின்ற வார்த்தைகளை வரிக்கு வரி உப யோகப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது!

‘நேற்று ராத்திரி என் பையன் ஒரு ஜோக் சொன்னான் பாருங்க.’ என்று சுவாரஸ்யமா ஆரம்பிப்போம். அது நமக்கு வேணும்; என்றால் சுவாரஸ்யமா இருக்கும்… அடுத்தவங்களுக்கும் அப்ப டியே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை!

சில பேருக்கு Mental Mannerism உண்டு.

சில பேருக்கு Physical Mannerism உண்டு.

இதுவே ஏனையவர்களுக்கு bore ஆ தெரியும்! ஒரு குறிப்பிட்ட வார்த்தையை திருப்பித் திருப்பி உபயோகப்படுத்தறது சில பேருடைய Mannerism! ஐ mean என்கின்ற வார்த்தை அப்படி த்தான். சில பேர் வரிக்கு வரி… “என்ன நான் சொல்றது?” என்று திருப்பித் திருப்பி கேட்டுக் கொண்டே இருப்பாங்க… அவங்க அப்படி கேட்டுக் கொண்டே இருந்தா. என்னத்தை நாம சொல்றது?

நல்ல பேச்சை விருப்பமா கேக்கிறவர்கள் தான் நல்ல விதமாகப் பேசமுடியும்.

நாம் பேசுவதைத் தான் மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறவங்க… bore ஆசாமியாத் தான் இருப்பாங்க.சரி bore ஐ cure பண்ண முடியுமா?

முடியும்! ஆரம்பத்திலேயே இதை கவனிக்க வேண்டும். சுயமா சிந்திச்சுப் பார்க்க வேண்டும். நம்ம சம்பந்தப்பட்ட விடயங்களிலே மட்டும் நாம் interest ஆக இருந்துவிடக் கூடாது!

நம்ம சுத்தியிருக்கிற விடயங்களிலேயும் interest எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுறுசுறுப்பா வேலை செய்பவர்களுக்குப் போர் அடிக்கிறதிலே! சும்மா உட்கார்ந்து இருக்கிறவங்களுக்குத் தான் போரடிக்கும்.

அதனாலே எப்பவும் active ஆக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.ஒரு வாத்தியார் பிள்ளைங்களைப் பார்த்து “நான் அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகப் போறேன்!” என்றார்.

உடனே ஒரு பையன் அழ ஆரம்பித்துவிட்டான்.

வாத்தியார் அவனுக்கு ஆறுதல் சொன்னார்.

“அழாதேப்பா…இன்னும் ஒரு வருடம் உங்ககூட தான் இருப்பேன்! அடுத்த வருஷம் தானே ரிட்டயர் ஆகப் போறேன்!” என்றார்.

பையன் கண்ணைத்துடைத்துக் கொண்டு.. “நீங்க இந்த வருஷமே ரிட்டயர் ஆகப் போறதா நான் நினைத்துக் கொண்டிருந்தேன் சார். இன்னும் ஒரு வருஷம் இருக்கு போல இருக்கே… அது தான் எனக்கு அழுகை வந்துவிட்டது!’ அப்படி என்றான்.

தென்கச்சி.கோ.சுவாமிநாதன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link