தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 16
இங்குதான் விஜய்க்கு எதிராகப் பிரசாரம் செய்தவர்கள், அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக்கழகம் சார்ந்த கத்தோலிக்கர்கள் சிலர், ஜோசப் விஜய் என விஜயின் பெயரை கூறத்தலைப்பட்டனர்.
இவ்வாறு ஜோசப் விஜய் எனக் கூறுவதனூடாக விஜய் ஓர் கத்தோலிக்கர் என்பதை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தி அதன் மூலம் தமிழகத்தின் அதிபெரும்பான் மையாக இருக்கக்கூடிய இந்துக்களின் வாக்குகள் நடிகர் விஜய்க்கு சேராத வண்ணம் வியூகம் அமைக்கப்பட்டது.
ஆம், தமிழக வரலாற்றில் இந்து சமயத்தவர் சார்ந்த வேறு எவரும் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கவில்லை.
எனவே ஜோசப் விஜய் என்ற பெயரை அடிக்கடி உச்சரிப்பதன் மூலம் இந்துக்களின் மனங்களில் விஜய் சார்ந்த எதிர்ப்புணர்வை ஏற்படுத்த திமுக கடும் பிரயத்தனம் செய்தது.
எனினும் ஓர் இந்துவாக இருந்து கொண்டு; நான் ஒரு கத்தோலிக்கன் எனக் கூறுகின்ற உதயநிதி ஸ்ராலினை விட- திருச்செந்தூர் மலையில் கார்த்திகைத் தீபம் ஏற்றுவதைத் தடுத்த மு.க.ஸ்ராலினை விட, இந்துக் கோயில்களுக்குச் சென்று வழிபாடாற்றக் கூடிய ஜோசப் விஜயை தமிழகத்தின் முதலமைச்சராக்குவது தான் உத்தமம் என தமிழக மக்கள் முடிவு செய்தனர்.
ஆக, தமிழக வரலாற்றில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் எனக் கூறியதற்காக தமிழக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து இறக்கியது மட்டுமன்றி, மு.க.ஸ்ராலினை அவரின் தொகுதியில் தோற்கடித்து இனிமேலும் சனாதனம் பற்றிப் பிதற்றாதே என எச்சரிக்கை செய்து பாடம் புகட்டினர்.
முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய்
இதுகாறும் விஜய் என அறியப்பட்ட நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற போது, ஜோசப் விஜய் ஆகிய நான் என்றவாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தவிர, தனது தந்தையாரின் பெயரை அவர் ‘சி’ (c) என முதலெழுத்துக்களோடு மட்டும் முடித்துக் கொண்டார்.
உண்மையில் சந்திரசேகர் ஜோசப் விஜய் ஆகிய நான் எனக்கூறி தனது பதவியேற்பை விஜய் செய்திருந்தால், அது தமிழையும் சைவத்தையும் கனம் பண்ணுவதாக இருந்திருக்கும்.
ஆம், முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் ஆகிய நான்… என்றுதான் ஸ்ராலின் கடந்த முறை பதவியேற்புச் செய்தார்.
அப்படியாயின், சந்திரசேகர் ஜோசப் விஜய் ஆகிய நான்… என்றவாறு பதவியேற்பைச் செய்திருந்தால், அதற்குள் மத சார்பற்ற பெருந்தன்மை தெரிந்திருக்கும்.
அது தவிர, சந்திரசேகர் என்பதன் முதலெழுத்து ‘ச’ என்பதாக இருக்க, ஆங்கிலத்தில் சந்திரசேகர் எனப்பெயர் மாற்றம் செய்து ‘சி’ (c) எனக் குறித்துரைத்ததும் தமிழைப் புறந்தள்ளும் நடவடிக்கையோ என எண்ணத் தோன்றும்.
இதற்கு மேலாக, முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், பதவியேற்பின் போதாவது தமிழ்ப் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்திருக்கலாம்.
ஆனால் அவர் வேட்டியைப் புறந்தள்ளி ஆங்கிலப் பண்பாட்டைப் பின்பற்றியிருந்தார்.
இவ்வாறு ஆங்கிலப் பண்பாட்டைப் பின்பற்றுவதற்கு அவர் தன்னை ஓர் கத்தோலி க்கராக முன்னிலைப்படுத்த விரும்பியதன் வெளிப்பாடோ என எண்ணுவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.
ஆம், தமிழகத்தின் முதலமைச்சர் பாரம்பரியம் என்பது கோட்சூட் உடனானதன்று.
மாறாக, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த அத்தனை ஆண்களும் வேட்டி அணிந்தே தமது பதவியை அலங்கரித்தனர்.
எனினும் விஜய் அந்தத் தமிழ்ப் பண்பாட்டை முறியடித்த போது, அது பற்றிய விமர்சனங்கள் எழுகை பெற்றன.
ஆம், கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் தமிழ்ப் பண்பா ட்டோடு கூடிய உடைகளை அணிந்து முதலமைச்சர் பதவியை விஜய் அலங்கரிக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சட்ட சபையின் சபாநாயகராக பிரபாகர்
ஆங்கிலக் கலாசாரம் பொருந்தியதாக கோட், சூட் அணிந்தவாறு முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கும் தமிழக முதலமைச்சர் விஜயின் ஆடை தொடர்பில் சர்ச்சை களும் விமர்சனங்களும் எழுகை பெற்றிருக்கும் வேளையில், தமிழக சட்டசபையின் சபாநாயகராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரபாகர் தனது உரையில் நீண்ட நேரத்தை பைபிள் தொடர்பில் உரையாற்றுவதற்கு எடுத்துக் கொண்டார்.
இதற்கும் அப்பால், தான் ஜயாயிரம் பைபிள்களை இலவசமாக விநியோகித்தது பற்றியும் சட்ட சபையின் உயரிய ஆசனத்தில் அமர்ந்திருந்து கூற, அதனை முதல மைச்சர் விஜய் உன்னிப்பாகக் கேட்டிருந்தார் என்பது சைவ மக்களிடையே பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை நாம் கூறும் போது சபாநாயகர் என்பதற்காக பைபிள் பற்றிப் பிரபாகர் பேசக் கூடாதா என யாரேனும் கேட்கலாம். இங்கு தான் பிரபாகர் சபாநாயகர் எனும் ஆசனத்தில் இருந்து கொண்டு பைபிளைப் பேசுவது பொருத்தமன்று.
ஏனெனில் தமிழகம் சைவத்திருநாடு. உலகப் புகழ்பெற்ற சிவாலயங்களை அமைத்த மாமன்னர்கள் ஆண்ட தென்னாடு, சிவன் உறையும் பூமி.
அந்த மண்ணின் ஆட்சிப் பீடத்தில் இருந்து கொண்டு தான் சார்ந்த சமயத்திற்குப் பிரசாரம் செய்வது போல சபாநாயகர் பிரபாகர் ஆற்றிய உரை எந்த வகையிலும் ஏற்புடையதன்று.
இதை நாம் கூறும் போது சபாநாயகர் என்ற உயரிய ஆசனத்தில் சைவ சமயத்தவர் ஒருவர் அமர்ந்திருந்து கொண்டு; பெரிய புராணம் பற்றியோ கந்தபுராணம் பற்றியோ பேசுவாராயின் அதுவும் பொருத்தமன்று என்பதே நம் வாதம்.
தொடரும்…


