நோயற்ற நீண்டகால வாழ்வுக்கு சைவ உணவே சிறந்தது
Share
(08.04.2026இன் தொட ர்ச்சி)
இவை அனைத்தும் சேர்ந்து இதய மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், நீரிழிவு நோய், புற்றுநோய், முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.
இவை அனைத்தும் மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவு முறையை நாங்கள் கடைப்பிடித்தாலும் பின்வரும் ஊட்டச்சத்துகள் போதுமான அளவில் கிடைக்கின்றதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
விற்றமின் b12 – பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள்
இரும்புச்சத்து – பருப்புவ கைகள், பச்சை நிற இலைக் கறிகள்
ஒமேகா 3 – ஆளிவிதை (கடயஒ ளநநன), புதினா குடும்ப விதை (flax seed) வாதுமைக் கொட்டை (walnut)
புரதம் – பருப்பு வகைகள், tofu சோயவிலிருந்து தயா ரிக்கப்பட்ட உணவுகள்
முக்கியமான ஆராய்ச்சி முடிவுகள்
இறப்பு அபாயம் (over all mortality risk)
ஒரு பெரிய ஆய்வு (adventist health study – 2, 2002): சைவ உணவு (vegetarian diet) எடுத்தவர்கள் ஏதோ ஒரு நோயால் மரணமடைவதில் மாமிச உணவு உண்பவர்களை விட 12% குறைவான அபாயம் உள்ளவராகக் காணப்படுகின்றனர்.
முழுமையாக சைவர்கள் (ஏநபயளெ) – 15% குறைவு
லக்ரோ-ஓவோ-சைவர்கள் (lacto-ovo-vegetarains) 9.0% குறைவு
இருதய நோய்களால் ஏற்படும் இறப்பு வீதம் மரக்கறி உண்பவர்களில் 24 வீதம் குறைவாக மாமிச உண்பவர்களுடன் ஒப்பிடுகையில் காணப்படுகிறது.
சைவ உணவு எடுத்தவர்களில் இளம் வயதினரில் இறப்பு வீதம் குறைவாக இருந்தது. இது மிகவும் தெளிவாக காணப்பட்டது.
large meta-analysis of 55 studies (2.2 million people ) என்னவெனில் மரக்கறி உணவு உண்பவர்களின் இறப்பு வீதம் மிகவும் குறைவாகவும் மற்றும் நீரிழிவு இருதய நோய், புற்றுநோய் என்பவற்றால் ஏற்படும் இறப்பு வீதம் குறைவாகக் காணப்படுகிறது.
adventist health study-1 (AHS-1)
சைவ உணவு எடுத்த ஆண்கள் அசைவ உணவு உண்பவர்களைவிட 9.5 வருடங்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
சைவ உணவுடன் தொடர்புடைய சில ஆரோக்கிய மான பழக்கங்கள்:
புகை பிடிக்காது இருத்தல்
மது அருந்தாதிருத்தல்
அதிகளவு உடற்பயிற்சி
சரியான உடல் பருமன் கட்டுப் பாடு
அமைதியானவர்கள்
தினசரி பழங்கள் எடுப்பதால் ஏற்படும் நன்மைகள்:
ஒரு அப்பிள் தினசரி எடுப்பது – மருத்துவரை சந்திக்க வேண்டியதில்லை
04 பாதாம் பருப்பு தினசரி எடுப்பது – புற்றுநோய் குறைவு
01 எலுமிச்சை-உடலின் கொழுப்பு குறையும்
பால், தயிர்- எலும்புகள் வலுவாகும்
04 பேரீச்சம்பழங்கள்- பலவீனம் இன்மை
01 வாழைப்பழம் செரிமானம் மேம்படுதல்
ஒரு கப் யோக்கற் – குடல் வலிமை
வால்நட்டுகள் – மூளை சுறு சுறுப்பாக இருக்கும்
பிரபலமான சைவ உணவு உண்ணும் விளையாட்டு வீரர்கள்:
வீனஸ் வில்லியம்ஸ் – டென்னிஸ்
அடம் ஹான்சன்- சைக்கிளிங்
லூயிஸ் ஹமில்டன் – 7 தடவை ஃ பார்முலா 1 உலக சாம்பியன்
ஜேம்ஸ் வில்க்ஸ் – குத்துச் சண்டை
ரிச் ரோல் – நெடுந்தூர ஓட்ட வீரர்
கிரெக் சப்பெல் – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
விலங்குகளில் நீண்ட ஆயுள் கொண்ட தாவர போசணிகள்:
இராட்சத ஆமை -200 ஆண் டுகள்
யானை- 60-70 ஆண்டுகள்
பெரிய கிளி வகைகள் (மக்கோ) – 100 ஆண்டுகள்
கொயி மீன்கள்-200 ஆண்டுகள்
பலமான மிருகங்கள் யானை, காண்டாமிருகம், நீர் எருமை இவையெல்லாம் தாவர போச ணிகள்
நினைவில் வைக்க:
வலிமை முட்டை அல்லது மாமிசத்திலிருந்து வருவது அல்ல, அது சக்தியைத் தரும் உணவுகளும் மற்றும் தசைகளின் நெருக்கமான தன்மை. 250ml பாலில் 1.2 மக்கிரோகிராம் b12 உள்ளது. மரக்கறி உணவு உண்பவர்கள் பால் உற்பத்தி உணவுகளை உட்கொள்ள
வேண்டும். (பன்னீர், தயிர், பாற்கட்டி யோகட்)
விற்றமின் c உள்ள உணவுகள்: கொய்யா, பப்பாளி, தோடம்பழம், கிவி, எலுமிச்சை, தக்காளி, திராட்சை
இரும்புச் சத்து உள்ள உணவுகள்: கடலை வகை, பருப்பு வகை, ஓட்ஸ், கறுப்பு அரிசி, முந்திரிப் பருப்பு, இலைக்கறி, கீரைவகை, பேரீச்சம்பழம்
docosahexaenoic acid (DHA) நிறைந்த உணவுகள்: சோயா, பாதாம், ஓட்ஸ், யோக்கட்
1. alpha-linolenic அமிலம் உள்ள உணவுகள்: flax seeds (ஆளி விதைகள்), chiaseeds (சியா விதைகள்), walnut, canola oil,soya beens oil
2. alpha-linolenic அமிலம் உடலில் DHA ஆக மாற்றம் அடைந்து DHA ஐ அதிகரிக்கிறது. DHA மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கும்.
Take home messages
அதாவது காய்கறிகள், பழங்கள் தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்ட உணவுக ளான பருப்பு வகைகள், முழுத் தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள், இவை அனைத்தும், நார்ச்சத்து (fiber), antioxidants நிறைந்தவை. ஆரோக்கியமான கொழுப்புக்கள் கொண்டவை.
இத்தகைய உணவுமுறை,
1. அழற்சியைக் குறைக்கிறது.
2. இதயத்தைப் பாதுகாக்கிறது.
3. உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
4. நீண்டகால நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. நலமான ஆரோக்கியத்தைத் தரு கிறது.
எனவே சைவ உணவுகளை உண்டுநோயற்ற வாழ்வும் நீண்ட வாழ்க்கையையும் அடை வோம்.
(முற்றும்)
தம்பிப்பிள்ளை பேரானந்தராசா
பொது வைத்திய நிபுணர்,
யாழ்.போதனா வைத்தியசாலை


