கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வீட்டிலிருக்கும் அரச ஊழியரை பயன்படுத்துக
Share
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆட்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் பட்டதாரிப் பயிலுநர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பட்டதாரிப்பயிலுநர்களை பணிக்கு அமர்த்துவது தேர்தல் சட்டத்துக்கு விரோதமானது.
இதனை நிறுத்துமாறு இம்மாதம் 3ஆம் திகதியே கடிதம் அனுப்பி இருந்தோம். இதன் பின்னரும் அப்படி முயற்சிப்பதானது தேர்தல் சட்ட மீறலாகவே கருதப்படும்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆட்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் என அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.