மும்பை வான்கடே மைதானத்தில் டோனி பெயரில் நிரந்தர இருக்கை
Share
2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் சிக்;ஸர் அடித்து வெற்றிபெற வைத்த டோனியை நினைவுகூரும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கிண்ண இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின.
வெற்றிக்கான ஓட் டத்தை இந்திய அணி கப்டன் மகேந்திரசிங் டோனி தனது ஸ்டைலில் சிக்ஸ் மூலம் அடித்தார்.
டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த ஷாட் மறக்க முடியாத ஒன்று. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபது-20 உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர், டோனி வென்ற 50 ஓவர் உலகக்கிண்ணம் இதுவாகும். 1983 ஆம் ஆண் டுக்குப்பின் சுமார் 28 வருடங் கள் கழித்து இந்தியா கிண்ணத்தைக்; கைப்பற்றியது.
தற்போது டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரை நினைவுகூரும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்க உயர் மட்ட கவுன்சில் உறுப்பினர் அஜிங்க்யா நாய்க் டோனி பெயரில் நிரந்தர இருக்கை அமைக்க வேண்டும் என்று மகாரா ஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுத்தியுள்ளார்.
அஜிங்க்யா நாய்க் அந்த கடிதத்தில் ‘‘கிரிக்கெட்டில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ள எம்.எஸ்.டோனிக்கு மரியாதை மற்றும் நன்றி செலுத்தும் வகையில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்த கடைசி சிக்ஸர் பந்து எந்த இருக்கையில் விழுந்ததோ, அந்த இருக்கைக்கு நிரந்தரமாக டோனியின் பெயரை சூட்ட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.