இந்திய தொடரை ரத்து செய்து தாய்நாட்டுக்கு திரும்பிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி
Share
கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக இந்திய கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப் பட்டதால், தென்னாபிரிக்க அணி சொந்த நாடு திரும்பியுள்ளது
.
தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது.
கடந்த 12ஆம் திகதி இமாச்சல பிரதேசத்தில் முதல் போட்டி நடக்க இருந்த நிலையில் மழையால் இரத்து செய்யப்பட் டது.
அடுத்த நாள் இரண்டாவது போட்டிக்காக தென்னாபிரிக்க அணி வீரர்கள் லக்னோ சென்ற டைந்தனர்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பீதியால் இந்தியா – தென்னாபிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டது.
இதனால் தென்னாபிரிக்க அணி வீரர்கள் சொந்த நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து புறப்பட்டு அவர்கள் நேற்று காலை தென்னாபிரிக்கா சென்றடைந்தனர். பெரும்பாலான நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் அவர்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என வலி யுறுத்தியுள்ளது. அதில் தென்னாபிரிக்காவும் ஒன்று.
இதனால் தென்னாபிரிக்கா வீரர்கள் தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைப்படுத்த இருக் கிறார்கள். இதை தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட்டின் தலைமை மரு த்துவ அதிகாரி மஜ்ரா கூறு கை யில், இந்தியாவில் இருந்து திரு ம்பிய வீரர்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சமூக இடைவெளியில் 14 நாட்கள் இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் அவர் களில் யாருக்காவது அறிகுறி தென்பட்டால் அல்லது கவலை அளிக்கும்படி இருந்தால், அதற்கு ஏற்றபடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் எனக் கூறியுள்ளார்.