Type to search

Sports

அன்று ரசிகனாக பார்த்தேன் இன்று பந்துவீச்சில் வீழ்த்தினேன்

Share

ஐ.பி.எல்.தொடரில் விளையாடும் சுனில் நரைன், ரஷித்கான் ஆகியோர் மிஸ்டரி பந்து வீச்சாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தியும் இணைந்துள்ளார்.

கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ள வருண் சக்ரவர்த்தி இறுதியாக சென்னையுடன் நடைபெற்ற போட்டியில் முக்கியமான தருணத்தில்; எம்.எஸ். டோனியை 11 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். எம்.எஸ்.டோனிக்கு எதிராக பந்து வீசியது நம்ப முடியாத தருணம் என வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வருண் சக்ரவர்த்தி கூறுகையில், ‘‘3 வருடத்திற்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்று எம். எஸ்.டோனியின் ஆட்டத்தை ஒரு ரசிகனாக கூட்டத்திற்கு நடுவில் இருந்து பார்த்து ரசித்தேன்.

தற்போது டோனிக்கு எதிராக நின்று பட்டிங் செய்வதை பார்க்கிறேன். அவருக்கு நான் பந்து வீசினேன். இது எனக்கு நம்பமுடியாத வகையிலான தருணம்.

ஆடுகளம் மிகவும் பிளாட்டாக இருந்தது. இது 180 ரன்கள் அடிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கும் என்று நினைத்தேன்.

டோனி சிறப்பாக பட்டிங் செய்து கொண்டிருந்தார். பந்தை சரியான லெந்தில் பிட்ச் செய்தால் விக்கெட் வீழ்த்த முடியும் என்று நினைத்தேன்.

திட்டத்தை சரியாக செயற் படுத்தினேன். போட்டி முடிந்த பின்னர் டோனியுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன்.

நான் தமிழில் சொல்ல விரும்பும் ஒரே வார்த்தை தல, தலதான்’’ என அவர் மேலும் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link