வுஹானில் மீண்டும் ஆரம்பித்தது பேருந்து சேவைகள்
Share
சீனாவின் வுஹான் நகரை தலைமை இடமாகக் கொண்ட ஹபேய் மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
வுஹானில் மட்டும் ஒரு கோடியே 10 இலட்சம் பேர் வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக சீனா முடங் கிப்போனது.
9 வாரங்களாக அங்கு ஊர டங்கு அமலில் இருந்தது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ஆம் திகதிவரை நீடித்திருந்த ஊரடங்கு நேற்று முன்தினம் தளர்த்தப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதிக்குப் பின்னர் நேற்று முன் தினம் வுஹான் நகரில் 30 சதவீதம் அதாவது 117 பேருந்துகள் இயக்கப் பட்டன. ஒவ்வொரு பேருந்திலும் ஒரு சுகாதார பாதுகாப்புக் கண் காணிப்பாளரும் பயணித்தார்.
அவர் பயணிகளை சோதனை செய்த பின்பே பேருந்தில் பயணிக்க அனுமதித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை காட்டும்விதமாக ஒவ்வொருவருக்கும் பச்சை நிற சுகா தார அட்டை வழங்கப்பட்டிருந்தது.
தற்போது ஹபேய், வுஹான் நகரங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.