பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமி
Share
16 வயது சிறுமியை ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் பின்லாந்தின் பிரதமர்.
ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது-34) என்ற பெண் பிரதமர் பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
அந்த வகையில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின் கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிறதுறைகளின் தலைமைப் பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது.
அந்த வகையில் பின்லாந்தில் 4 ஆவது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது.