கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ; அவசர காலநிலை பிரகடனம்
Share
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில், விமானி உயிரிழந்துள்ளார்.
‘டீநடட ருர்-1’ என்ற விமானமே நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 10 மணியள வில் மத்திய கலிபோர்னியாவில், சான்பிரான் சிஸ்கோவிற்கு தெற்கே 160 மைல் தொலைவில் உள்ள ஃப்ரெஸ்னோ பகுதியில் விபத்துக்குள் ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
கலிபோர்னியாவில் 72 மணி நேரத்தில் சுமார் 11,000 மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது, இதனால் 367 தீப் பிடிப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த தீ பரவலினால் ஆயிரக் கணக்கான நிலப் பகுதி தீக்கிரையாகியுள்ளதுடன், பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலம் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.