ஒரே நாளில் 683 பேர் – இத்தாலியை சரிக்கும் கொரோனா
Share
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 683 பேர் உயிரிழ ந்தனர்.
இதனால் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந் தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது சீனாவின் ஹீபேய் மாகாணம் வுஹான் நக ரில் கடந்த டிசெம்பர் மா தம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற் போது உலகின் 196 நாடு களில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலின் வீரி யம் நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டே வரு கிறது.
இந்நிலையில், உல கம் முழுவதும் இதுவரை 4 இலட்சத்து 62 ஆயிரத் திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 20 ஆயிரத் திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர்.
மேலும், 3 இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பினர்.
இதற்கிடையே, சீனா வில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப் பிய நாடுகளில் கோரத் தாண்டவமாடி வருகிறது. குறிப்பாக இத்தாலியை இந்த வைரஸ் புரட்டி யெ டுத்து வருகிறது.
இத்தாலியில் இதுவரை 74 ஆயிரத்து 386 பேரு க்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலை யில், கொரோனாவுக்கு அந்நாட்டில் நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் 683 பேர் உயிரிழந்தனர்.
இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயி ரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 503 ஆக அதிகரித்தது.