ஒரேநாளில் 1,438 பேர் பலி! பிரான்ஸை மிரட்டும் கொரோனா
Share
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆயிரத்து 438 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடு களைப் புரட்டியெடுத்துவருகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் தற்போது பிரான்ஸில் தீவிரமடைந்து வருகிறது.
அந்நாட்டில் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது.
இந்நிலையில் நேற்றுக்காலை நிலவரப்படி, பிரான்ஸில் மொத்தம் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 863 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
குறிப்பாக நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் புதிதாக 4 ஆயிரத்து 560 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் வைரஸ் பரவியவர் களில் இதுவரை 30 ஆயிரத்து 955 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர்.
இந்நிலையில் அந்நாட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 438 பேர் பலியாகினர்.இதனால் பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 167 ஆக அதிகரித்தது.