Type to search

World News

உடல் நிலை மோசமடைகிறது என்னை விடுதலை செய்யுங்கள்

Share

சவுதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளவரசி பஸ்மா பின்ட் சவுட் அல் சவுட் தன்னை விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.

இளவரசியின் உத்தியோ கபூர்வ டுவிட்டர் மூலம் இந்த வேண்டுகோள் வெளியானது.

என்னை சவுதி அரேபியாவின் அல்ஹெயர் சிறையில் தன்னிச்சையாக தடுத்து வைத் துள்ளனர். எனது உடல் நிலை மோசமடைகிறது .

நான் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் மேலும் தெரிவத்தார்.

சவுதி அரேபியாவை 1953 முதல் 1964 வரை ஆட்சி புரிந்த மன்னர் சவுட்டின் இளைய மகளே பஸ்மா என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கடந்த சில வருடங்களாக அரச குடும்பத்தினர் மத்தியில் மனிதாபிமான விவகார ங்கள் அரசமைப்பு சீர்திருத்தங்கள் போன்ற வற்றிற்கான குரல் கொடுப்பவர்களில் முக்கிய மானவராக மாறியிருந்தார்.

இந்நிலையில் திடீரென இளவரசி அவருடைய மகள்களுடன் தடுப்புக்காவலில் வைக் கப்பட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

நாட்டிலிருந்து தப்பியோட முயன்ற வேளை அவர் கைது செய்யப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

பின்னர் அவர் எங்கும் காணப்படாத நிலையிலேயே அவரின் இந்த டுவிட்டர் தகவல் வெளியாகியது.

எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில் நான் தன்னிச்சையாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுளளேன் என்பது உங்களுக்குத் தெரியும் என அவர் சவுதி மன்னருக்கான டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.

எனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது,இதன் காரணமாக நான் மரணிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

எனக்கு எந்தவித மருத்துவ உதவிகளோ எனது கடிதங்களுக்கான பதில்களோ கிடைக்க வில்லை என டுவிட்டரில் குறிப்பிட்ட இளவரசி, எந்தக் காரணமும் இல்லாமல் என்னை எனது மகள்களுடன் கடத்தி சிறையில் தள்ளியுள்ளனர் என மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link