உடல்களால் நிரம்பியிருக்கும் அமெரிக்க வைத்தியசாலை
Share
அமெரிக்காவின் டெட்டிரோய்டின் சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் படங்கள் வெளியாகின.
சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் இந்தப் படங்களை வெளியிட்டனர்.
வைத்தியசாலையின் பல பகுதிகளில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்தப் படங்கள் காண்பித்தன.
பிரேத அறை முற்றாக நிரம்பிருப்பதாலும் இரவில் அது செயற்படாததன் காரணமாகவும் ஆய்வறையொன்றை உடல்களை வைப்பதற்குப் பயன்படுத்தி வருவதாக வைத்தியசாலையின் பணியாளர்கள் தெரிவித்தனர்.
எங்கள் நோயாளர்களுக்கே வைத்தியசாலையில் இடமில்லை. இதன் காரணமாக உடல்களை கட்டில்களில் வைத்திருக்க முடியவில்லை எனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு கட்டிலில் இரு உடல்கள் காணப்படுவதையும் கதிரையொன்றில் உடல் ஒன்று வைக்கப்ப ட்டிருப்பதையும் படங்கள் காண்பித்தன. மூன்று உடல்களும் பைகளால் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை வைத்தியசாலையில் குளிரூட்டப்பட்ட அறையில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் படங்களும்; வெளியாகின.
அதிகரிக்கும் உயிரிழப்பு காரணமாக உடல்கள் இவ்வாறு வைக்கப்படுவதாக வைத்தியசாலையின் பணியாளர்கள் தெரிவித்தனர்.